சன நடமாட்டம் அதிகமுள்ள யாழ்.நகரப் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை

யாழ்.நகாில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பெருமாள் கோவிலடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள்
நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளது.

வீட்டின் உரிமையாளர்களான கணவன் – மனைவி வேலைக்கு சென்றுள்ளனர். பிள்ளைகளும் பாடசாலை
சென்றுள்ளனர். அச்சமயம் வீட்டில் யாருமற்ற வேளை புகுந்த திருடர்கள் வீட்டின்னுள் சல்லடை
போட்டு தேடுதல் நடாத்தி

வீட்டில் இருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வீட்டு
உரிமையாளரினால் யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடைத்தொகுதிகள் காணப்படுவதுடன் , தனியார் கல்வி நிறுவனங்களும்
காணப்படுவதனால் பகலில் சன நடமாட்டம் அதிகமாக இருக்கும். என்பது குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *