விராட் கோலி குடிக்கும் தண்ணீர் பாட்டிலின் விலை எவ்வளவு தெரியுமா ?

இந்திய கிரிக்கெட் அணிக்குக் கபில்தேவ், அசாருதீன், கங்குலி, டிராவிட், தோனிக்கு அடுத்து கிடைத்துள்ள கேப்டன் விராட் கோலி. இன்று மிக்சிறந்த வீரராகக் கருதப்படும் விராட் கோலியை பற்றி சமூக ஊடகங்களில் பல விஷயங்கள் உலா வருகிறது. இவை எல்லாம் கோலியின் ரசிகர்களுக்குத் கிடைத்த நல்ல தீனியாகத்தான் இருக்கும்.
அந்த வரிசையில் தற்போது ஒரு புதிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகிறது.அதில் கேப்டன் விராட் கோலி குடிக்கும் நீரானது பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகிறதாம்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல எவியன் என்ற நிறுவனத்தில் இருந்துதான் இந்த தண்ணீர் பாட்டில்கள் கோலிக்காக ஸ்பெஷாலா இந்தியா வருகிறதாம்.

இந்த தண்ணீர் பாட்டிலை நம் இந்திய கிரிக்கெட் அணிவீரர்களில் கோலி மட்டும்தான் இதை குடிக்கிறாராம்.

இந்த தண்ணீர் பாட்டில்கள் 330 மி.லிட்டர் 500 மி லிட்டர், 750 மி லிட்டர், மற்றும், 1.5 மி லிட்டர் ஆகிய அளவுகள் சந்தையில் விற்பனைக்கு வருகிறதாம். மேலும் இதன் விலையும் கேட்கவே மலைக்க வைக்கிறது. ஆம் இதன் விலை மிகவும் உயர்வாகவே உள்ளது. நம்ம கோலி குடிக்கும் குடிநீர் பாட்டிலின் விலை ரூ.600 ஆகும்.

இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் எலியன் நிறுவனத்தினர், பனிகள் படர்ந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இத்தனை விலையாம்! பல்வேறு சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *