வடக்கு கிழக்கில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நிரந்தர நியமனம்!

வடக்கு , கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

இத்தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை அவர்களுக்கான நியமனக் கடிதங்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.

வடக்கு – கிழக்கில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பின் தரம் III இற்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக விஜயகலா மகேஸ்வரனின் விடுத்த வேண்டுகோளுக்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த மார்ச் 14ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.

அதற்கமைய வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 1,302 பேர் பங்குபற்றியிருந்தனர்.அவர்களில் அமைச்சரவையால் முன்வைக்கப்பட்ட தகைமைகளை முழுமை செய்த 1,130 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *