வடக்கில் சோதனை சாவடிகளின் எண்ணிக்கை குறைப்பு! யாழ். கட்டளை தளபதி உறுதி

யாழில் அதிகமாக உள்ள இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் குறித்து, யாழ் கட்டளை தளபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

யாழிலிருந்து வெளியிடங்களிற்கு செல்பவர்கள் அதிக சோதனை கெடுபிடிகளை சந்திப்பதை பற்றி குறிப்பிட்ட மனோ கணேசன், அது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கில் ஐ.எஸ் தாக்குதல் அபாயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவதானமாக இருப்பதாக குறிப்பிட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, தற்போது நிலைமை சுமூகமாகி வருவதால் சோதனை நடவடிக்கைகளை தளர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார் என தனது முகப்புத்தகத்தில் அமைச்சர் மனோ கணேசனின் குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *