யாழில் பயனாளிகளிடம் வீடுகளை கையளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க

வடக்கு, கிழக்கு மீள் குடியேற்ற மறுவாழ்வு அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பயனாளிகளிடம் கையளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நெடுங்குளம் கிராம அலுவலர் பிரிவில் கட்டி முடிக்கப்பட்ட 5 கல் வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது 6 இலட்சம் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவரண அபிவிருத்தி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

யாழ். மாநகரசபை வளாகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன, தயா கமகே, கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதி ராஜா, சிதார்த்தன், வடமாகாணசபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *