தேரருக்கு விடுதலை – ஆனந்த சுதாதகரனுக்கு பாகுபாடு! கூட்டமைப்பு எம்.பி கவலை

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரன் விடயத்தில் அரசாங்கம் எவ்வித கருசனையும் காட்டாது உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜ சபையில் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருசனையும் காட்டாதுள்ளது.

இந்த நிலையில், சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்கு வேறு சட்டமும் என்ற வகையில் பாகுபாடாக நடந்துகொள்வது நியாயமானதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் யார், அவர்களுடன் தொடர்பில் உள்ள அரசியவாதிகள் யார் என்பதெல்லாம் தெரிந்தும் வடக்கில் சோதனை சாவடிகளை அமைப்பதும் மக்களை கஷ்டப்படுத்துவதும் நியாயமா” என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *