தாக்குதல் பற்றி தெரிந்து கொண்டே ஜனாதிபதி திருப்பதிக்கு சென்றிருந்தார்: வீரவன்ச

தாக்குதல் பற்றி தெரிந்து கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஆலயத்திற்கு சென்றார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 16ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்தி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் பற்றி அறிந்து கொண்டே மைத்திரி இவ்வாறு ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார் என விமல் வீரவன்ச இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்கூட்டியே தெரிந்திருந்தது எனவும் அதன் காரணமாகவே வழமையாக சித்திரை விடுமுறையை வெளிநாடுகளில் கழிக்கும் அவர், இம்முறை ரணில் நுவரெலியாவில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடினார் என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *