இராணுவத்தின் மீது அனந்திக்கு ஏற்பட்ட திடீர் காதல்

வட மாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவே கூடாது, மாறாக இங்கு இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவசரமாக கோரி உள்ளார் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன்.

வடக்கில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் என்று இவ்வளவு காலமும் கோரி வந்திருக்கின்ற இவருக்கு இப்போது ஏற்பட்டிருக்கின்ற சுடலை ஞானம் காரணமாக இவர் இவ்விதம் குத்துக்கரணம் அடித்து உள்ளார்.

இவர் இது குறித்து தெரிவித்து உள்ளவை வருமாறு

வட மாகாணத்துக்கு வழங்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற்றப்படவே கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வகையில் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு கூட்டப்பட வேண்டும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே முழுபொறுப்பையும் ஏற்க வேண்டும். கிடைத்திருந்த புலனாய்வு அறிக்கையின்படி அரசாங்கம் செயற்பட்டு இருந்தால் மனித பேரழிவை குறைத்திருக்க முடியும். எல்லா இலங்கையர்களும் ஒரே நாட்டவராக ஒன்றுபட்டு நின்று பயங்கரவாதத்துக்கு எதிராக போர் கொடி தூக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

சர்வதேச பயங்கரவாத கட்டமைப்புகளுடன், இஸ்லாமிய தீவிரவாத கும்பல்களுடனும் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *